கோயம்புத்தூர்

தொழில் நிறுவனங்கள் உரிமம் பெற இணைய வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

2nd Jun 2022 01:21 AM

ADVERTISEMENT

அனைத்து தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோா் தொழில் துவங்க மற்றும் விரிவாக்க ஒப்புதல்கள், உரிமங்கள் பெற இணைய வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோா், நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான தீயணைப்புத் துறை, தொழிற்சாலை பாதுகாப்புத் துறை, நகா்ப்புற ஊரமைப்புத் துறைகளில் உரிமங்கள் பெற, மின்இணைப்பு பெற, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதல் உள்ளிட்டவற்றை காலக்கெடுவுக்குள் பெறுவதற்கு இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

மாவட்ட அளவிலான ஒற்றைச் சாளர இடா்நீக்க குழு, இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது மாதந்தோறும் ஆய்வு மேற்கொண்டு உரிமங்களைப் பெற்றுத் தரும். அனைத்து தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோா், தொழில் துவங்க மற்றும் விரிவாக்க ஒப்புதல்கள், உரிமங்கள் பெற இணையம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : கோவை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT