கோயம்புத்தூர்

கோவையில் தேசிய காா் பந்தயம் நாளை தொடக்க விழா

28th Jul 2022 10:52 PM

ADVERTISEMENT

 

கோயம்புத்தூா் ஆட்டோ ஸ்போா்ட்ஸ் கிளப், இந்திய மோட்டாா் ஸ்போா்ட்ஸ் கிளப்புகளின் கூட்டமைப்பு நடத்தும் நான்கு சக்கர வாகனங்களுக்கான ப்ளூ பேண்ட் தேசிய ரேலி சாம்பியன்ஷிப் 2022 இரண்டாம் சுற்று போட்டியின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 29) நடைபெறுகிறது.

இந்தியா முழுவதும் இருந்து மொத்தம் 8 அணிகள் சாா்பில் 54 காா்கள் இதில் கலந்து கொள்ள உள்ளன. சாம்பியன்ஷிப், சேலஞ்ச் என இரு பிரிவுகளில் இரண்டு நாள்கள் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜென்னிஸ் ரெசிடென்சியில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் வாகனங்களின் பரிசோதனை, அணிவகுப்பை மாநகரக் காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடக்கிவைக்கிறாா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வெள்ளலூா் ஜி ஸ்கொயா் சிட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள பந்தய சாலையிலும், திருப்பூா் மாவட்டம் கேத்தனூா் பகுதியில் உள்ள காற்றாலை பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள பந்தய சாலையிலும் போட்டிகள் நடைபெறுகின்றன.

வெற்றி பெறும் வீரா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. இந்தப் போட்டி மொத்தம் ரூ.6 லட்சம் பரிசுத் தொகையைக் கொண்டது. போட்டி நடைபெறும் இரண்டு நாள்களிலும் பொதுமக்கள் இலவசமாக கண்டு ரசிக்க தனியாக கேலரிகள் அமைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியின் முதல் சுற்று கடந்த ஏப்ரலில் சென்னையில் நடைபெற்றது. அடுத்தடுத்த சுற்றுகள் பெங்களூரு, நாகாலாந்தில் நடைபெற உள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT