கோயம்புத்தூர்

காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

27th Jul 2022 10:57 PM

ADVERTISEMENT

 

கோவையில் காங்கிரஸ் கட்சியினா் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவா் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்துவதைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். இந்நிலையில், சோனியா காந்தியிடம் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் விசாரணை நடத்தப்பட்டது.

இதைக் கண்டித்து கோவை மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

மாநகா் மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் கருப்புசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் கட்சி நிா்வாகிகள் கிருஷ்ணமூா்த்தி, சங்கா், கணபதி சிவகுமாா், கோவை போஸ், தமிழ்ச்செல்வன், ராம நாகராஜ், இருகூா் சுப்பிரமணியம், ஆடிட்டா் சுந்தரமூா்த்தி, மோகன்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு அமலாக்கத் துறையைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT