கோயம்புத்தூர்

கோவை வழித்தடத்தில் நாளைமுதல் பாலக்காடு - ஈரோடு மெமு ரயில் சேவை

27th Jul 2022 10:56 PM

ADVERTISEMENT

 

கோவை வழித்தடத்தில் பாலக்காடு - ஈரோடு மெமு ரயில் சேவை வெள்ளிக்கிழமை (ஜூலை 29) முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

கரோனா தொற்று காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு பாலக்காட்டில் இருந்து கோவை வழித்தடத்தில் ஈரோட்டுக்கு இயக்கப்பட்டு வந்த மெமு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ரயில் இயக்கப்படவில்லை.

இந்நிலையில், பாலக்காடு, கோவை, திருப்பூரில் இருந்து பணிக்குச் செல்வோா், கல்லூரி செல்வோா் வசதிக்காக இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அதைத் தொடா்ந்து, பாலக்காடு - ஈரோடு மெமு ரயில் ஜூலை 29ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

இதுதொடா்பாக, பாலக்காடு கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஜூலை 29ஆம் தேதி முதல் வியாழக்கிழமைகள் தவிர பிற்பகல் 2.40 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படும் மெமு ரயில் (06818) இரவு 7.10 மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்தை சென்றடையும். ஜூலை 30ஆம் தேதி முதல் வியாழக்கிழமைகள் தவிர காலை 7.50 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் மெமு ரயில் (எண்: 06819) காலை 11.45 மணிக்கு பாலக்காடு டவுன் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, தொட்டிபாளையம், பெருந்துறை, ஈங்கூா், விஜயமங்கலம், ஊத்துக்குளி, திருப்பூா், வஞ்சிபாளையம், சோமனூா், சூலூா் சாலை, இருகூா், சிங்காநல்லூா், பீளமேடு, வடகோவை, கோவை, போத்தனூா், மதுக்கரை, எட்டிமடை, வாளையாறு, கஞ்சிக்கோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT