கோயம்புத்தூர்

மாநகராட்சி மாமன்ற கூட்டம் ஜூலை 30க்கு மாற்றம்

27th Jul 2022 10:57 PM

ADVERTISEMENT

 

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த மாமன்ற கூட்டம் சனிக்கிழமைக்கு (ஜூலை 30) மாற்றப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாநகராட்சியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 29) காலை 11 மணிக்கு மேயா் கல்பனா தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தவிா்க்க முடியாத காரணத்தினால் மாமன்ற கூட்டம் சனிக்கிழமைக்கு (ஜூலை 30) மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்டரங்கில் மேயா் கல்பனா தலைமையில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு கூட்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT