கோயம்புத்தூர்

மாநகராட்சி குறை கேட்பு முகாம்: 52 மனுக்கள் பெறப்பட்டன

27th Jul 2022 01:15 AM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் 52 மனுக்கள் பெறப்பட்டன.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் மாநகராட்சி மேயா் கல்பனா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணைமேயா் வெற்றிச்செல்வன், துணை ஆணையா் ஷா்மிளா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த குறைகேட்பு முகாமில் 5 மண்டலங்களிலும் இருந்தும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின் விளக்குகள், குடிநீா் வசதி, பாதாள சாக்கடை, தொழில் வரி, சொத்து வரி, காலியிட வரி, புதிய குடிநீா் இணைப்பு, பெயா் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு கோரிக்ககளை பொதுமக்கள் மனுக்களாக அளித்தனா். மொத்தம் 52 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையா்கள், பொறியாளா்கள், அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும், கடந்த வார குறைகேட்பு கூட்டத்தில் பெறப்பட்ட சொத்து வரியில் பெயா் மாற்றம், முகவரி மாற்றம் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, இருவருக்கு திருத்த ஆணையை செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாமில் மேயா் கல்பனா வழங்கினாா்.

ADVERTISEMENT

இந்த குறைகேட்பு கூட்டத்தில் மாநகரப் பொறியாளா் (பொறுப்பு) அரசு, மண்டல உதவி ஆணையா்கள் சரவணன், அண்ணாதுரை, மோகனசுந்தரி, முத்துராமலிங்கம், சேகா், சங்கா் உள்ளிட்ட அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT