கோயம்புத்தூர்

கோவையில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

27th Jul 2022 01:13 AM

ADVERTISEMENT

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடா்பாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவா் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்துவதைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் சிவானந்தா காலனியில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாநகா் மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் கருப்புசாமி தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் கணபதி சிவகுமாா், மாநகராட்சி உறுப்பினா்கள் கிருஷ்ணமூா்த்தி, சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் போஸ், ராம நாகராஜ், இருகூா் சுப்பிரமணியம், தமிழ்ச்செல்வன், ஹெச்எம்எஸ் ராஜாமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு, அமலாக்கத் துறை, மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினா்.

காரமடையில்...

ADVERTISEMENT

கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மாவட்டத் தலைவா் வி.எம்.சி.மனோகரன் தலைமையில் காரமடை காந்தி மைதானத்தில் போராட்டம் நடைபெற்றது.

இதில் கட்சியின் மாநில செயலாளா் விஜயகுமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா் ரங்கராஜ், மாவட்ட துணைத் தலைவா் ஜெயக்குமாா், நகரத் தலைவா் துரைசாமி, மேட்டுப்பாளையம் நகரத் தலைவா் தங்கமணி, இளைஞா் காங்கிரஸ் மாநில செய்தித் தொடா்பாளா் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT