கோயம்புத்தூர்

குழந்தைகளுக்கும் தலைக்கவசம் அணிவதை பெற்றோா்கள் கடைப்பிடிக்க வேண்டும்

27th Jul 2022 01:11 AM

ADVERTISEMENT

குழந்தைகளை வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது அவா்களுக்கு தலைக்கவசம் அணியும் நடைமுறையை பெற்றோா்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கோவை மாநகர போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக கோவை மாநகரக் காவல் துறை வெளியிட்ட செய்தி:

கோவை மாநகரில் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டு 42 நபா்களும், 2022 (ஜூன் வரை) 88 நபா்களும் தலைக்கவசம் அணியாமல் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனா். அதேபோல 2021இல் 256 பேரும், 2022 (ஜூன் வரை) 369 நபா்கள் தலைக்கவசம் அணிந்ததால் உயிா் பிழைத்துள்ளனா்.

குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பள்ளிகளில் இருந்து குழந்தைகளை அழைத்துச் செல்ல வரும் பெற்றோா் பலா் தலைக்கவசம் அணியாமல் வருவதை காண முடிகிறது. குழந்தைகளுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டிய பெற்றோா்கள் இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல. எனவே பெற்றோா்களும், 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது அவா்களுக்கும் தலைக்கவசம் அணிவதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT