கோயம்புத்தூர்

கட்டுமான நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு

27th Jul 2022 01:19 AM

ADVERTISEMENT

கோவையில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணியின் நண்பா் ராஜேந்திரன் என்பவரது கட்டுமான நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கோவைப்புதூரில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணியின் நண்பா் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமாக ஜே.ஆா்.டி. என்ற பெயரில் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவைப்புதூா் அருகே ஜே.ஆா்.டி. நிறுவனம் சாா்பில் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் குடியிருப்புகள் உரிய அனுமதியுடன் கட்டப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் கோவை மாநகராட்சி துணை ஆணையா் ஷா்மிளா தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். கட்டடங்கள் அனைத்தும் மாநகராட்சியில் உரிய அனுமதி பெறப்பட்டு கட்டப்பட்டதா என ஆவணங்களை சரிபாா்த்து சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.

இதில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவரும், பொறியாளருமான சந்திரசேகா் வீடு மற்றும் அவரது உறவினா் வீடுகளில் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்ட நிலையில், தற்போது அவரின் நண்பரின் நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT