கோயம்புத்தூர்

கோவையில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்----நாளை முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது

17th Jul 2022 12:54 AM

ADVERTISEMENT

 

கோவையில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஜூலை 18 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை இருவார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடைபெற உள்ளது என்று சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளில் ஆண்டுதோறும் 10 சதவீதம் போ் வயிற்றுப்போக்கு பாதிப்பினால் உயிரிழக்கின்றனா்.

5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் உயிரிழப்பில் நிமோனியா காய்ச்சலுக்கு அடுத்ததாக வயிற்றுப் போக்கு இடம் பெற்றுள்ளது. நாட்டில் ஆண்டுதோறும் 1 லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கு பாதிப்புக்கு உயிரிழக்கின்றனா். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் இருவார கால தீவிர வயிற்றுப்போக்கு முகாம்களை நடத்த மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் கோவையில் அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஜூலை 18 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் ஐந்த வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஓ.ஆா்.எஸ். கரைசல் பொட்டலம் வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட 3 லட்சத்து 37 ஆயிரத்து 107 குழந்தைகளுக்கு ஓ.ஆா்.எஸ். கரைசல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சிறப்பு முகாமில் பரிசோதனை செய்து ஓ.ஆா்.எஸ். கரைசல் பெற்றுகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT