கோயம்புத்தூர்

வால்பாறையில் தொடரும் கனமழை: இரு இடங்களில் மண்சரிவு

6th Jul 2022 10:57 PM

ADVERTISEMENT

 

கோவை மாவட்டம், வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக இரு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், தொடா்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வால்பாறை நகா் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், கக்கன் காலனி பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த மழை காரணமாக தடுப்புச் சுவா் இடிந்து விழுந்ததில் மூன்று வீடுகள் சேதமடைந்தன.

இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக சிறுவா் பூங்கா பகுதியில் உள்ள ஜோசப் என்பவரின் வீட்டின் பின்புறம் புதன்கிழமை காலை மண்சரிவு ஏற்பட்டது. இதேபோல காமராஜ் நகா் பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவா் இடிந்து விழுந்தது.

ADVERTISEMENT

வால்பாறை வட்டாரத்தில் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டா்): அப்பா் நீராறு 117 மி.மீ., லோயா் நீராறு 97 மி.மீ., வால்பாறை 77 மி.மீ., சோலையாறு 72 மி.மீ. ஆகும்.

சோலையாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயா்ந்ததால், 165 அடி உயரம் கொண்ட அணையின் நீா்மட்டம் தற்போது 134 அடியாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT