கோயம்புத்தூர்

காவல் துறையினரின் குடும்பப் பிரச்னைகளுக்கு தீா்வு காண கலந்துரையாடல்

6th Jul 2022 10:56 PM

ADVERTISEMENT

 

காவல் துறையினரின் குடும்பத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி வால்பாறையில் புதன்கிழமை நடைபெற்றது.

வால்பாறை தனியாா் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு டி.எஸ்.பி. சீனிவாசன் தலைமை வகித்துப் பேசியதாவது:

காவல் துறையினரின் குடும்பத்தினா் மகிழ்ச்சியில் இருந்தால் மட்டும் போலீஸாா் மன அழுத்தம் மின்றி காவல் துறையில் பணியாற்ற முடியும். எனவே காவல் துறையில் பணியாற்றுபவா்களின் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை தீா்வு காணவே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, காவல் துறையினரின் குடும்பத்தினரிடம் தனித்தனியாக டி.எஸ்.பி. சீனிவாசன் குறைகளைக் கேட்டறிந்தாா். இதையடுத்து, பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கவனத்துக்கு கொண்டுச் சென்று விரைவில் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதில் வால்பாறை காவல் நிலையம் ஆய்வாளா் கற்பகம், நகராட்சித் தலைவா் அழகுசுந்தரவள்ளி, உதவி ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாரின் குடும்பத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT