கோயம்புத்தூர்

கோவை: வடவள்ளி சந்திரசேகர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை 

6th Jul 2022 06:27 PM

ADVERTISEMENT

கோவை: வடவள்ளி சந்திரசேகர் நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர், கட்டுமான ஒப்பந்தப் பணிகளை எடுத்து செய்துவருகின்றார்.

தமிழ்நாடு முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணியின் வலதுகரமாக பார்க்கப்படுபவர் வடவள்ளி சந்திரசேகர். வடவள்ளி சந்திரசேகரை பொருத்தவரையில் அதிமுகவின் அதிகார பலமிக்க முன்னணி தலைவர்களுக்கு நெருக்கமாக இருப்பவர். அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது நாளிதழின்  வெளியீட்டாளர் வடவள்ளி சந்திரசேகர்  ஒப்பந்தங்களை எடுத்து கட்டுமான பணிகளை மேற்கொண்டார். 

ADVERTISEMENT

கல்யாண மண்டபம், ரியல் எஸ்டேட் , ஆலய அறக்கட்டளை உள்ளிட்ட உடமைகளுக்கும் வடவள்ளி சந்திரசேகர் உரிமையாளராக இருக்கின்றார். இந்த நிலையில் டெண்டர் எடுத்து கோடிக்கணக்கில் ஊழல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரின் வீட்டில் சோதனை நடத்திய போது இவரது வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டு இருந்தன. 

இந்த நிலையில் வடவள்ளி சந்திரசேகர் வீட்டில் இன்று மூன்றாவது முறையாக சோதனை நடந்துவருகின்றன. இந்த மூன்றாவது சோதனையை பொருத்தவரையில் வருமான வரித்துறையினர் அதிகாரிகள் புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிக்க: தேங்காய்க்கு உரிய விலை இல்லை! 145 மரங்களை வெட்டி, விவசாயி வேதனை

வடவள்ளி சந்திரசேகர் இதுவரை மொத்தமாக இரண்டு லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளின் சோதனைகளுக்கும், ஒரு வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனைகளுக்கும்  உள்ளாகியிருக்கிறார். 

வடவள்ளி சந்திரசேகருக்கு சொந்தமான மொத்தம் ஆறு இடங்களில் சோதனை நடந்துவருகின்றன. அதிமுக வழக்கறிஞர் அணியினரும், தொண்டர்களும், நிர்வாகிகளும் வீட்டிற்க்கு வர ஆரம்பித்திருக்கின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT