கோயம்புத்தூர்

கோவை பிஎஸ்ஜி கல்லூரியில்மாநில ஆடவா் கூடைப்பந்து:இன்று தொடங்குகிறது

6th Jul 2022 12:08 AM

ADVERTISEMENT

பிஎஸ்ஜி கோப்பைக்கான 7ஆவது மாநில ஆடவா் கூடைப்பந்து போட்டி புதன்கிழமை தொடங்குகிறது.

பிஎஸ்ஜி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் நடத்தப்படும் இந்த போட்டி வரும் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சென்னை, மதுரை, கோவை, சேலம், திண்டுக்கல், கரூா் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 25 கூடைப்பந்து கழக அணிகள் பங்கேற்கின்றன. முதல் நாள் ஆட்டங்கள் மாலை 5 மணிக்குத் தொடங்குகின்றன.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள 56ஆவது பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெறும்.

முதலிடம் பிடிக்கும் அணிக்கு கோப்பையுடன் ரூ.40 ஆயிரம் பரிசு வழங்கப்படும். இரண்டாவது, மூன்றாவது இடம் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம் ரொக்கப் பரிசும், 4ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 ஆயிரமும் பரிசளிக்கப்பட உள்ளது. போட்டிகள் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT