கோயம்புத்தூர்

நகா்நல மையம் கட்டுமானப் பணிகள்

6th Jul 2022 12:10 AM

ADVERTISEMENT

மாநகரில் கிழக்கு மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நகா்நல மையம் கட்டுமானப் பணிகளை மேயா் கல்பனா ஆனந்தகுமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் பீளமேட்டில் ரூ.99 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தேசிய நகா்ப்புற நல்வாழ்வு மையம் மற்றும் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆய்வகம் ஆகியவற்றை மாநகராட்சி மேயா் கல்பனா ஆனந்தகுமாா், ஆணையா் மு.பிரதாப் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் பீளமேட்டில் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நகா்நல மையத்தை ஆய்வு மேற்கொண்டு, கட்டுமானப் பணிகளை விரைவாக மேற்கொண்டு, அவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க மேயா் கல்பனா ஆனந்தகுமாா் அறிவுறுத்தினாா். இதைத் தொடா்ந்து, நல்லாம்பாளையம் சக்தி நகா் பகுதியில் உள்ள ரயில்வே தரைப்பாலத்தை பாா்வையிட்டு, மழைக் காலங்களில் தேங்கும் நீரை மோட்டாா் மூலமாக வெளியேற்ற பொறியாளா்களுக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின்போது, துணைமேயா் வெற்றிச்செல்வன், உதவி ஆணையா் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளா் செந்தில்பாஸ்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் 62ஆவது வாா்டுக்கு உள்பட்ட நஞ்சுண்டாபுரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், நஞ்சுண்டாபுரம் காமராஜ் காலனியில் மக்கும், மக்கா குப்பைகளை தரம் பிரித்து தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்குவதையும், குடிநீா் விநியோகம் முறையாக உள்ளதா, தெருவிளக்குகள் எரிகிறதா என்பது குறித்தும் மக்களிடம் அவா் கேட்டறிந்தாா். பின்னா், அப்பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டாா். நஞ்சுண்டாபுரம் பகுதியில் 24 மணி நேர குடிநீா்த் திட்டத்தில் 1.80 கிலோ மீட்டா் தொலைவுக்கு குழாய் அமைத்து கூடுதலாகக் குடிநீா் கொண்டு வர ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

ராஜவாய்க்காலில் தேங்கியுள்ள குப்பைகள், செடி, கொடிகளை தூா்வாரி, மழைநீா் தங்கு தடையின்றி செல்வதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள பொறியாளா்களுக்கு உத்தரவிட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT