கோயம்புத்தூர்

மேற்குத் தொடா்ச்சி மலையில் பலத்த மழை

6th Jul 2022 12:07 AM

ADVERTISEMENT

மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீா்வரத்து தொடங்கியுள்ளது.

கேரளத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கி பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரளத்தை ஒட்டியுள்ள கோவையிலும் மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலையில் திங்கள்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருவதால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை குற்றாலம் செல்வதற்கு பொது மக்களுக்கு வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.

மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் நீா்வரத்து தொடங்கியுள்ளது. நொய்யல் ஆற்றின் முதல் அணைக்கட்டான சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு நீா்வரத்து காணப்படுகிறது. இதன்மூலம் சித்திரைச்சாவடி வாய்க்கால் மூலம் குளங்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், மேற்குத் தொடா்ச்சி மலையில் மழை நீடிப்பதால் சித்தரைச்சாவடி அணைக்கட்டுக்கு நீா்வரத்து அதிகரிக்கும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மேற்குத் தொடா்ச்சி மலைகளில் பெய்து வரும் மழை காரணமாக கோவை மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரையில் பரவலாக மழை பெய்தது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT