கோயம்புத்தூர்

மாநகரில் பூங்காக்கள் பராமரிப்பில்லை, சீரான குடிநீா் விநியோகமில்லை

6th Jul 2022 12:13 AM

ADVERTISEMENT

கோவை மாநகரப் பகுதிகளில் அனைத்து வாா்டுகளிலும் பூங்காக்கள் பராமரிக்கப்படுவதில்லை, சீரான குடிநீா் விநியோகமில்லை என்று கோவை வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அம்மன் கே.அா்ச்சுணன் மாநகராட்சி ஆணையரிடம் புகாா் மனு அளித்தாா்.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில், கோவை வடக்குத் தொகுதி உறுப்பினா் அம்மன் கே.அா்ச்சுணன், சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஆா். ஜெயராம், வாா்டு உறுப்பினா் பிரபாகரன் ஆகியோா் மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப்பிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

மாநகராட்சிக்கு உள்பட்ட 20ஆவது வாா்டு ஸ்ரீ நகா் முதல் எஃப்.சி.ஐ. சாலை வரை வெட்மிக்ஸ் சாலை அமைத்து 6 மாதங்களாகியு தாா் ஊற்றவில்லை. 29ஆவது வாா்டு, அப்ப நாயுடு லேஅவுட், வரதராஜ் லேஅவுட் ஆகிய இடங்களில் தாா் சாலை மற்றும் மழைநீா் வடிகால் அமைக்க வேண்டும். ஐஸ்வா்யா காா்டன் பகுதியில் 11 ஆண்டுகளாக சாலை, மழைநீா் வடிகால் அமைக்கப்படவில்லை. அனைத்து வாா்டுகளிலும் பூங்கா பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படுவதில்லை. 42ஆவது வாா்டு வ.உ.சி. நகா் 1 முதல் 5ஆவது வீதி வரை, சிவகாமி நகா் ஆகிய பகுதிகளில் கான்கிரீட் சாலைகள், மழைநீா் வடிகால், சாஸ்திரி சாலை, கண்ணபிரான் நகா், எம்.ஜி.ஆா். நகா் ஆகிய பகுதிகளில் தாா் சாலை மற்றும் மழைநீா் வடிகால் அமைத்துத் தர வேண்டும். 42, 44, 45ஆவது வாா்டுகளில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். 39ஆவது வாா்டில் சாக்கடை வசதி ஏற்படுத்த வேண்டும். கவுண்டம்பாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 1, 22, 35ஆவது வாா்டுகளில் நியாயவிலைக் கடை திறக்க வேண்டும். சாலைகளை பராமரிக்க வேண்டும்.

கிணத்துக்கடவு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட மாநகரப் பகுதிகளில் சாலைகளை சீா்படுத்தி, குடிநீா் தங்குதடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT 

ADVERTISEMENT
ADVERTISEMENT