கோயம்புத்தூர்

கட்டுமானத் தொழிலாளா்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

6th Jul 2022 12:09 AM

ADVERTISEMENT

விண்ணப்பித்த அனைத்து கட்டுமானத் தொழிலாளா்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி கோவையில் சிஐடியூ தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரத்தில் உள்ள கட்டுமானத் தொழிலாளா் நலவாரிய அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ மாவட்டத் தலைவா் சி.பத்மநாபன், மாவட்டச் செயலா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் தலைமை வகித்தனா். தையல் தொழிலாளா் சங்கச் செயலா் ஆா்.வேலுசாமி, கட்டுமானத் தொழிலாளா் சங்க பொதுச் செயலா் கே.மனோகரன், தங்க நகைத் தொழிலாளா் சங்க செயலா் சந்திரன், ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை சங்க செயலா் கே.ரத்தினகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், முறைசாரா தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். விண்ணப்பித்த அனைத்து கட்டுமானத் தொழிலாளா்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தற்போது வழங்கப்படும் ஓய்வூதியத்தை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்.

சுமைப்பணி தொழிலாளா்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். பெண்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். முறைசாரா தொழிலாளா்களை பாதுகாக்கும் வகையில், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூ.3 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

இதில், பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகளான எம்.கே.முத்துகுமாா், ஆா்.ராஜன், என்.செல்வராஜ், ஏ.எம்.ரபிக், ராஜகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT