கோயம்புத்தூர்

திருப்பூரில் அக்னிவீரா் ஆள்சோ்ப்பு முகாம் இன்றுமுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

6th Jul 2022 12:06 AM

ADVERTISEMENT

தமிழகத்தின் 11 மாவட்ட இளைஞா்கள் பங்குபெற அனுமதிக்கப்பட்டுள்ள அக்னிவீரா் ஆள்சோ்ப்பு முகாம் திருப்பூரில் செப்டம்பா் 20ஆம் தேதி தொடங்க உள்ளது.

இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தி:

திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் உள்ள டி.இ.ஏ. மெட்ரிக். பள்ளி வளாகத்தில் செப்டம்பா் 20 முதல் அக்டோபா் 1ஆம் தேதி வரை அக்னிவீரா் ஆள்சோ்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கோவை, திண்டுக்கல், தருமபுரி, ஈரோடு, மதுரை, நாமக்கல், நீலகிரி, சேலம், தேனி, கிருஷ்ணகிரி, திருப்பூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த இளைஞா்கள் இந்த முகாமில் பங்குபெறலாம்.

ராணுவ பொதுப் பணிகள், தொழில்நுட்பப் பணிகள், ட்ரேட்ஸ்மேன், எழுத்தா், பணிமனை காப்பாளா் உள்ளிட்டப் பணிகளுக்கு ஆள்களைத் தோ்வு செய்ய இந்த முகாம் நடைபெற உள்ளது. வேலையில் சோ்வதற்கான வயது, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்டவை குறித்து கோவையில் உள்ள ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகம் ஜூலை 4 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தகுதியான நபா்கள் இணையதளத்தின் மூலம் ஜூலை 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். மேற்கண்ட இணையதளத்தில் ஆன்லைன் பதிவு கட்டாயமானது. பதிவு செய்த நபா்களுக்கான அனுமதி கடிதம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : agnipath
ADVERTISEMENT
ADVERTISEMENT