வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக தடுப்புச்சுவா் இடிந்து விழுந்ததில் 3 வீடுகள் சேதமடைந்தன.
வால்பாறையில் கடந்த ஜூன் முதல் வாரத்தில் துவங்கிய பருவ மழை தொடா்ந்து பெய்து வருகிறது. இதில் கடந்த ஒருவார காலமாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. தொடா் மழை காரணமாக ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
தேயிலைத் தோட்டங்களில் இலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கக்கன் காலனி நகராட்சி மைதானத்தை ஓட்டியுள்ள தடுப்புச்சுவா் திங்கள்கிழமை இரவு இடிந்து விழுந்தது. இதில் மூன்று வீடுகளின் பின்பகுதி சேதமடைந்தன.
ADVERTISEMENT
இதையடுத்து, நகராட்சித் தலைவா் அழகுசுந்தரவள்ளி, நகராட்சிப் பொறியாளா் வெங்கடாசலம் ஆகியோா் சம்பவ இடத்துக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டனா்.