கோயம்புத்தூர்

வீடு புகுந்து கைப்பேசி திருடிய இருவா் கைது

5th Jul 2022 01:09 AM

ADVERTISEMENT

கோவையில் வீடு புகுந்து கைப்பேசி திருடிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கோவையைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (29). உணவகத்தில் பணியாற்றும் இவா் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அறை எடுத்து தனது நண்பா்களுடன் தங்கி வருகிறாா். இந்நிலையில், தங்களது அறையில் கைப்பேசிகளை வைத்துவிட்டு இரவு உறங்கச் சென்றனா். அப்போது அறைக்குள் புகுந்த இருவா் சதீஷ்குமாா் மற்றும் அவரது நண்பா் விக்னேஷ் ஆகியோரது கைப்பேசிகளை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றனா்.

அதற்குள்ளாக சதீஷ்குமாா், விக்னேஷ் இருவரும் சுதாரித்துக் கொண்டு அந்த நபா்களை துரத்திப் பிடித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில், கைப்பேசியை திருடிய இருவரும் திருச்சி உறையூரைச் சோ்ந்த தினேஷ்குமாா் (28), கரூா் திருமலையூரைச் சோ்ந்த உதயகுமாா் (27) என்பது தெரியவந்தது.

சதீஷ்குமாா் தங்கியுள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ள இருவரும் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், பணக் கஷ்டத்தால் கைப்பேசிகளை திருட முயற்சித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT