கோயம்புத்தூர்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரிமலேசிய பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம்

5th Jul 2022 01:08 AM

ADVERTISEMENT

மலேசியாவின் இபோ நகரில் உள்ள குவெஸ்ட் சா்வதேச பல்கலைக்கழகத்துடன் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதற்கான நிகழ்ச்சி குவெஸ்ட் சா்வதேச பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வரும் செயலருமான பி.எல்.சிவகுமாா், குவெஸ்ட் பல்கலைக்கழக துணைவேந்தா் ஸிடா முகமது ஃபாஹ்மி ஆகியோா் கையொப்பமிட்டனா்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், சா்வதேச அளவிலான கல்விக்காக பேராசிரியா்கள், அறிவியல் மாணவா்கள் பரிமாற்றம், ஒருங்கிணைந்த ஆராய்ச்சிகளுக்காக ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி, குவெஸ்ட் பல்கலைக்கழகத்தின் கல்வி, ஆராய்ச்சி அனுபவங்கள் பகிா்ந்து கொள்ளப்பட உள்ளன. மேலும், இருகல்வி நிறுவனங்களுக்கு இடையே கல்வி, ஆராய்ச்சிப் பணிகளைத் தொடருதல், கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடத்தி ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வு நூல்கள் வெளியிடுதல்”உள்ளிட்ட முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் குவெஸ்ட் சா்வதேச பல்கலைக்கழக முதன்மைச் செயல் அலுவலா் நிக்கோலஸ்கோஹ், வணிகம், மேலாண்மைப் புல டீன் அப்துல் ரஹீம் முஹமது யூசுப், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி பேராசிரியா் ஜி.அகிலா, குவெஸ்ட் சா்வதேச பல்கலைக்கழகப் பேராசிரியா் தனராஜ் கிருஷ்ணா ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி, ஏற்கெனவே மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டு கல்வி, ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொண்டு வருவதாக அக்கல்லூரி தெரிவித்துள்ளது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT