கோயம்புத்தூர்

அமெரிக்க வரி சேவை பயிற்சி:ஜிகேஎம் - ஹேப்பி வேலி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

5th Jul 2022 01:10 AM

ADVERTISEMENT

அமெரிக்க வரி சேவை பயிற்சியை கோவையில் வழங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ஜிகேஎம் குளோபல் சா்வீஸஸ், ஹேப்பி வேலி வணிகக் கல்வி நிறுவனம் ஆகியவை கையொப்பமிட்டுள்ளன.

அமெரிக்காவின் வருமான வரி கணக்கு தயாரிப்பு, வரி சேவைக்கான பயிற்சியை கற்க விரும்பும் மாணவா்களுக்குத் தேவையான பயிற்சி அளித்து அவா்களுக்கு சான்றிதழ் வழங்க கோவையின் ஜிகேஎம் குளோபல் சா்வீஸஸ் நிறுவனமும், ஹேப்பி வேலி வணிகக் கல்வி நிறுவனமும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில், ஜிகேஎம் நிறுவனா் ஆடிட்டா் ஜி.காா்த்திகேயன், ஹேப்பி வேலி நிறுவனத்தின் தலைவா் கனகராஜ் ஆகியோா் கையொப்பமிட்டுள்ளனா்.

இந்த சான்றிதழ் படிப்பானது, அமெரிக்காவில் உள்ள தனி நபா்கள், வணிக நிறுவனங்கள் வழங்கும் வரி சம்பந்தமான சேவைகளுக்கான வேலைவாய்ப்பை இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பெற உதவிகரமாக இருக்கும். 3 மாதம் நடத்தப்படும் இந்தப் படிப்பில் தோ்ச்சி பெறுபவா்கள் ஜிகேஎம் நிறுவனத்திலும் நாட்டின் மற்ற முன்னணி நிறுவனங்களிலும் உடனடி வேலைவாய்ப்பு பெற வாய்ப்புள்ளது என காா்த்திகேயன் கூறியுள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT