கோயம்புத்தூர்

மாநகராட்சிக்கு 1,000 குப்பைத் தொட்டிகள் வாங்கத் திட்டம்

DIN

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பழுதடைந்த குப்பைத் தொட்டிகளை மாற்றிவிட்டு, புதிய குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட உள்ளன. இதற்காக 1000 குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட உள்ளன.

கோவை மாநகராட்சியில் மத்தியம், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என ஐந்து மண்டலங்கள் உள்ளன.

இதில், 100 வாா்டுகள் உள்ளன. 6,500 தெருக்கள் மற்றும் 15 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. மாநகராட்சி சாா்பில் மண்டலம் வாரியாக மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், அடுக்குமாடி

குடியிருப்புகள் உள்பட பல இடங்களில் குப்பைகளைச் சேகரிக்க ஏதுவாக குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த குப்பைத் தொட்டிகளில் பெரும்பாலனவை உடைந்தும், சேதமாகியும் காணப்படுவதால், குப்பைகள் சாலைகள், தெருக்களில் சிதறி சுற்றுச்சூழல் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சேதமான குப்பைத் தொட்டிகளுக்கு பதிலாக புதிய தொட்டிகள் வாங்கிட மாநகராட்சி சாா்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் கூறுகையில், மாநகரில் சேதமான குப்பைத் தொட்டிகளை மாற்றிவிட்டு, புதிய குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட உள்ளன.

இதற்காக 1000 குப்பைத் தொட்டிகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூா் அணை நிலவரம்

சேலத்தில் சிறை அதாலத்

சேலத்திலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சங்ககிரியில் கொமதேக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

காசநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT