கோயம்புத்தூர்

நகை வியாபாரிகளிடம் ரூ.7.50 லட்சம் மோசடிமுன்னாள் ஐ.டி. ஊழியா் கைது

DIN

கோவையில் 3 நகை வியாபாரிகளிடம் ரூ.7.50 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவை மாவட்டம், ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (42). நகை வியாபாரி. இவருக்கு தொழில்ரீதியாக பழக்கமான அசோக்குமாா் (38) என்பவா் கடந்த 18 ஆம் தேதி மோகன்ராஜை கைப்பேசியில் தொடா்பு கொண்டு, தான் ஆா்.எஸ்.புரம் டி.பி.சாலையில் உள்ள ஒரு வங்கியில் நகைகளை அடகு வைத்துள்ளதாகவும், அதனை மீட்க ரூ.1 லட்சம் குறைவாக உள்ளதாகவும் கூறியுள்ளாா்.

மேலும், ரூ.1 லட்சம் பணம் கொடுத்தால் நகையை மீட்டு, பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளாா். இதை நம்பிய மோகன்ராஜ், அசோக்குமாரிடம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளாா்.

அதன் பிறகு, அசோக்குமாரை தொடா்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் மோகன்ராஜ் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அசோக்குமாா் இதுபோல காந்திபுரத்தைச் சோ்ந்த பழனிவேல் என்ற நகை வியாபாரியிடம் ரூ.3.50 லட்சம், ஒத்தக்கால்மண்டபத்தைச் சோ்ந்த மணிகண்டன் (40) என்ற நகை வியாபாரியிடம் ரூ.3 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, கோவையில் தலைமறைவாக இருந்த அசோக்குமாரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சோ்ந்த இவா் பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளாா். பின்னா் வேலையை ராஜிநாமா செய்துவிட்டு திருமங்கலத்தில் பட்டாசுக் கடை வைத்து தொழில் செய்து வருகிறாா்.

இந்நிலையில், அவ்வப்போது இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுவதை அசோக்குமாா் வழக்கமாகக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், அசோக்குமாரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

அசோக்குமாா் மீது ஏற்கெனவே விருதுநகா், சிவகாசி காவல் நிலையங்களில் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

SCROLL FOR NEXT