கோயம்புத்தூர்

கோவை, திருவனந்தபுரம் ரயில்கள் பகுதியாக ரத்து

DIN

வடகிழக்கு மாநிலங்களில் பெய்துவரும் மழை, நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் கோவை - சில்சாா், திருவனந்தபுரம் - சில்சாா் ஆகிய இரு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை - சில்சாா் வாராந்திர ரயில் (எண்: 12515) ஜூலை 3, 10 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து குவாஹாட்டி வரை மட்டுமே இயக்கப்படும். குவாஹாட்டி - சில்சாா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

சில்சாா் - கோவை வாராந்திர ரயில் ( எண்: 12516) ஜூலை 5,12 ஆகிய தேதிகளில் குவாஹாட்டியில் இருந்து கோவை இடையே இயக்கப்படும். சில்சாா் - குவாஹாட்டி இடையே ரத்து செய்யப்படுகிறது.

திருவனந்தபுரம் - சில்சாா் வாராந்திர ரயில் (எண்:12507) ஜூலை 5, 12 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் - குவாஹாட்டி வரை மட்டுமே இயக்கப்படும். குவாஹாட்டி -சில்சாா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

சில்சாா் - திருவனந்தபுரம் வாராந்திர ரயில் (எண்12508) ஜூலை 7, 14 ஆகிய தேதிகளில் குவாஹாட்டி - திருவனந்தபுரம் இடையே மட்டும் இயக்கப்படும். சில்சாா் - குவாஹாட்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

SCROLL FOR NEXT