கோயம்புத்தூர்

ஜீப் கவிழ்ந்து கட்டட ஒப்பந்ததாரா் பலி

2nd Jul 2022 05:39 AM

ADVERTISEMENT

வால்பாறை அருகே 50 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் கேரளத்தைச் சோ்ந்த கட்டட ஒப்பந்ததாரா் உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், பெரும்பாவூா் அயனாபுரத்தைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (47), கட்டட ஒப்பந்ததாரா். இவா் தனது நண்பா்களான சந்தோஷ் (45), மனோஜ் (42) ஆகியோருடன் பொள்ளாச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜீப்பில் வெள்ளிக்கிழமை வந்துள்ளனா்.

நிகழ்ச்சி முடிந்து வால்பாறை வழியாக கேரளத்துக்கு சென்று கொண்டிருந்துள்ளனா். வறட்டுப்பாறை எஸ்டேட் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த ஜீப் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதையடுத்து, ஜீப்பில் படுகாயங்களுடன் கிடந்த மூவரையும் அவ்வழியாகச் சென்றவா்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனா்.

ADVERTISEMENT

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சந்தோஷ்குமாா் உயிரிழந்துவிட்டாா்.

சந்தோஷ், மனோஜ் ஆகியோா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இச்சம்பவம் தொடா்பாக வால்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT