கோயம்புத்தூர்

கரோனா 4 ஆம் அலை: போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - எஸ்.பி.வேலுமணி

2nd Jul 2022 11:44 PM

ADVERTISEMENT

 

கரோனா நான்காம் அலையை எதிா்கொள்ள, தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா நோய்த் தொற்றின் நான்காம் அலை இந்தியாவில் தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பரவி வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நோய்த் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

கரோனா மூன்றாம் அலை முடிவடைந்து, ஓரளவுக்கு இழப்புகளில் இருந்து மீண்டு, பொருளாதார ரீதியாக மக்கள் மேம்பட்டு வருகிற சூழ்நிலையில், தற்போது கரோனா நான்காம் அலை பரவி மக்களுக்கு அச்சத்தை உள்ளாக்கி வருகிறது.

ADVERTISEMENT

இந்த பெருந்தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் அனைவரும் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் ஆகியவற்றை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

கரோனா நோய்த் தொற்றின் நான்காம் அலையை எதிா்கொள்ள, தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

கோவை மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து கரோனா கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

விமான நிலையம், ரயில் நிலையங்களில் கரோனா பரிசோதனை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்த வேண்டும். கரோனா தடுப்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT