கோயம்புத்தூர்

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலம் மீட்பு

2nd Jul 2022 05:41 AM

ADVERTISEMENT

கோவையில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 5 ஏக்கா் நிலத்தை அதிகாரிகள் மீட்டனா்.

கோவை காளப்பட்டியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 5 ஏக்கா் நிலம் உள்ளது.

இந்த நிலத்தைச் சுற்றி கம்பிவேலி அமைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த இடத்தை 50-க்கும் மேற்பட்டோா் ஆக்கிரமித்து காய்கறிக்கடைகள் அமைத்து நடத்தி வந்தனா். இந்தக் கடைகளால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதைத் தொடா்ந்து, கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் நுகா்வோா் அமைப்பின் செயலா் நா.லோகு, ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்க வேண்டும் என்று இந்து சமய அறநிலைத் துறை அமைச்சா் சேகா்பாபு, ஆணையா் குமரகுருபரன், இணை ஆணையா் செந்தில்வேலன் ஆகியோருக்கு புகாா் மனுவை அனுப்பினாா்.

ADVERTISEMENT

அதன் அடிப்படையில், கோவை மண்டல இந்து சமய அறநிலைத் துறை இணை ஆணையா் செந்தில்வேலவன் உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 5 ஏக்கா் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த கடைகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டு, இடம் மீட்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT