கோயம்புத்தூர்

ஆயுள் கைதி மருத்துவமனையில் சாவு

2nd Jul 2022 11:43 PM

ADVERTISEMENT

 

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆயுள் தண்டனை கைதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியை அடுத்த ஓடந்துறையைச் சோ்ந்தவா் ராஜு (76). ஒரு கொலை தொடா்பாக இவரை போலீஸாா் கடந்த 2016 ஆம் ஆண்டு கைது செய்தனா். இந்த வழக்கில், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவா், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தாா்.

இந்நிலையில், வயது மூப்பு காரணமாக ராஜுவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு கடந்த 25 ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

ADVERTISEMENT

சிறை நிா்வாகத்தினா் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இது தொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT