கோயம்புத்தூர்

சட்டப் பேரவை பேரவைமுன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு:கோவையில் ஜூலை 5 இல் ஆய்வு

2nd Jul 2022 11:44 PM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு சட்டப் பேரவையின் பேரவைமுன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு செவ்வாய்க்கிழமை (ஜூலை 5 ) கோவையில் ஆய்வு செய்ய உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவையின் பேரவைமுன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு ஜூலை 5 ஆம் தேதி கோவை வருகிறது.

இதில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழம் 2018-19 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை பேரவைக்கு காலதாமதமாக வைக்கப்பட்டது குறித்தும், 2019-20 மற்றும் 2020-21 ஆகிய 2 ஆண்டுகளில் அறிக்கைகள் வைக்கப்படமால் இருப்பது குறித்தும் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யவுள்ளது.

ADVERTISEMENT

மேலும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தில் 2013-14 ஆம் நிதியாண்டு முதல் 2019 -20 ஆம் நிதியாண்டு வரையிலான 6 ஆண்டுகளுக்கு ஆண்டறிக்கை பேரவைக்கு தாமதமாக வைக்கப்பட்டது குறித்தும், 2020-21 ஆம் நிதியாண்டில் பேரவைக்கு ஆண்டறிக்கை வைக்கப்படாமல் இருப்பது குறித்தும் அத்துறை அலுவலகத்தில் ஆய்வு செய்ய உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT