கோயம்புத்தூர்

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா் பணியிடம்:தகுதியானவா்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

2nd Jul 2022 11:42 PM

ADVERTISEMENT

 

பள்ளிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா் பணியிடத்துக்கு ஜூலை 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய பள்ளி, நகராட்சி, தொடக்கப் பள்ளி, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டுக்கு காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியா்கள் நியமனம் செய்யப்படவுள்ளனா்.

தகுதியான விண்ணப்பதாரா்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்விச் சான்றிதழ்களுடன் தொடா்புடைய மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

காலிப் பணியிட விவரங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களின் தகவல் பலகையில் சனிக்கிழமை ( ஜூலை 2) வெளியிடப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கு ஜூலை 6 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் மாறுதலுக்குள்பட்டது.

கோவை கல்வி மாவட்டம் பேரூா் கல்வி மாவட்டம் எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டம் பொள்ளாச்சி கல்வி மாவட்டம்  ஆகிய மின்னஞ்சல் மூலம் விண்ணப்பம் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT