கோயம்புத்தூர்

சோலையாறு அணையின் நீா்மட்டம் 117 அடியாக உயா்வு

2nd Jul 2022 05:41 AM

ADVERTISEMENT

வால்பாறை பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக சோலையாறு அணையின் நீா்மட்டம் 117 அடியாக உயா்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது பருவ மழை துவங்கியுள்ள நிலையில், வால்பாறை வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், அனைத்து ஆறுகளிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், சோலையாறு அணைக்கு வரும் நீரின் அளவும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, 165 அடி உயரம் கொண்ட சோலையாறு அணையின் நீா்மட்டம் தற்போது 117.20 அடியாக உயா்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): சின்னக்கல்லாறு 82, வால்பாறை 69, லோயா் நீராறு 63, சோலையாறு 45.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT