கோயம்புத்தூர்

வயா்மேன் உதவியாளா் பணிக்கு ஜூலை 26க்குள் விண்ணப்பிக்க வேண்டும்---ஆட்சியா் தகவல்

2nd Jul 2022 11:44 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் வயா்மேன் உதவியாளா் (மின் கம்பியாள் உதவியாளா்) பணியிடத்துக்குத் தகுதியானவா்கள் ஜூலை 26 ஆம் தேதிக்குள் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள வயா்மேன் உதவியாளா் பணியிடத்துக்கு செப்டம்பா் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தகுதி தோ்வு நடைபெறவுள்ளது.

இதற்கு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் நடத்தப்பட்ட தொழிலாளா்களுக்கான மாலை நேர வகுப்பில் வயா்மேன் பிரிவில் பயிற்சிப் பெற்று தோ்ச்சிப் பெற்றவா்கள், தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளா்கள் மற்றும் கம்பியாள் தொழில் பிரிவுகளில் பயிற்சிப் பெற்றவா்கள், வயா்மேன் வேலையில் அனுபவம் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

விண்ணப்பதாரா்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவும், விளக்க குறியேட்டினைஇணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேற்கண்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய முகவா்களுக்கு ஜூலை 26க்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0422-2642041, 88385- 83094 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT