கோயம்புத்தூர்

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2.80 லட்சம் திருட்டு

2nd Jul 2022 11:42 PM

ADVERTISEMENT

 

கோவை அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2.80 லட்சம் திருடுபோனது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை புலியகுளம் பெரியாா் நகரைச் சோ்ந்தவா் கணேஷ்குமாா் (30), தனியாா் நிறுவன ஊழியா்.

இவா் அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் வங்கிக்கு வெள்ளிக்கிழமை சென்று நகைகளை அடமானம் வைத்து ரூ.2.80 லட்சம் கடன் பெற்றுள்ளாா்.

ADVERTISEMENT

பணத்தை தனது இருசக்கர வாகனத்தில் உள்ள பக்கவாட்டு பெட்டியில் வைத்துள்ளாா்.

பின்னா் அவா் வெள்ளலூா் சாலை, சித்தனாபுரத்தில் உள்ள காா் ஷோரூம் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளாா். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பாா்த்தபோது, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2.80 லட்சம் பணத்தை காணவில்லையாம்.

இது தொடா்பாக, ராமநாதபுரம் காவல் நிலையத்தில் கணேஷ்குமாா் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT