கோயம்புத்தூர்

திருநெல்வேலி - பிலாஸ்பூா் ரயில் இன்று ரத்து

2nd Jul 2022 11:42 PM

ADVERTISEMENT

 

திருநெல்வேலியில் இருந்து பிலாஸ்பூருக்கு கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாக்பூா் பகுதி ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, திருநெல்வேலியில் இருந்து கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் பிலாஸ்பூருக்கு இயக்கப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்:22620) ஜூலை 3 ஆம் தேதி முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல, பிலாஸ்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஜூலை 5 ஆம் தேதி இயக்கப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் ( எண்: 22619) முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT