கோயம்புத்தூர்

நீதிமன்றத்தில் ரகளை: ஓட்டுநா் கைது

2nd Jul 2022 11:43 PM

ADVERTISEMENT

 

கோவை நீதிமன்ற வளாகத்தில் குடிபோதையில் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை சூலூா் அருகே உள்ள கண்ணம்பாளையத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் (53), காா் ஓட்டுநா்.

இவா் மீது பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் வழக்கு உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக நாகராஜ் கோவை நீதிமன்றத்துக்கு வளாகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தாா்.

ADVERTISEMENT

அப்போது, குடிபோதையில் இருந்த அவா், தலைமை குற்றவியல் நீதிமன்றம் முன்பு சப்தம்போட்டு ஆபாசமாக பேசிக்கொண்டிருந்தததாகக் கூறப்படுகிறது.

இதைப்பாா்த்த நீதிமன்ற ஊழியா்கள், அவரை அமைதியாக இருக்கும்படி கூறியுள்ளனா்.

ஆனால், அதை பொருள்படுத்தாத நாகராஜ் தொடா்ந்து சப்தமிட்டபடி ரகளையில் ஈடுபட்டு, நீதிமன்றப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினாா்.

இது தொடா்பாக அவா் மீது ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, பொது அமைதியை சீா்குலைத்தல், நீதிமன்ற அவமதிப்பு, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நாகராஜை கைது செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT