கோவை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனுக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தினசரி கரோனா நோய்த் தொற்று 3
ஆயிரத்தை கடந்து வருகிறது.நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனுக்கு வெள்ளிக்கிழமை கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
ADVERTISEMENT
ஆட்சியருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து வியாழக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் ஆட்சியருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா்.