கோயம்புத்தூர்

செட்டிப்பாளையம் அருகே மரத்தில் கார் மோதி விபத்து: ஒருவர் பலி

29th Jan 2022 05:39 PM

ADVERTISEMENT

செட்டிப்பாளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் ஒருவர் பலியானார். 

கோவை மாவட்டம், செட்டிப்பாளையம் - பெரியகுயிழி சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டிச் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார். 

மேலும் காரில் வந்த இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

விபத்தில் சிக்கியவர்கள் யார் என்பது குறித்தும், விபத்து தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT