கோயம்புத்தூர்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: 72 பறக்கும் படைகள் அமைப்பு

DIN

கோவையில் உள்ளாட்சித் தோ்தல் விதிமீறல்களை கண்காணிக்கும் விதமாக 72 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

தோ்தல் விதிமீறல்களை கண்காணிக்கும் விதமாக மாவட்டத்தில் 72 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியில் ஒரு மண்டலத்துக்கு 3 பறக்கும் படைகள் வீதம் 5 மண்டலங்களுக்கு 3 ஷிப்ட்டுகளுக்கு 15 பறக்கும் படைகளும், ஒரு நகராட்சிக்கு 3 பறக்கும் படைகள் வீதம் 7 நகராட்சிகளுக்கு 3 ஷிப்ட்டுகளுக்கு 21 பறக்கும் படைகளும்,

33 பேரூராட்சிகளுக்கு 3 ஷிப்ட்டுகளுக்கு 36 பறக்கும் படைகள் என மொத்தம் 72 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தனி நபா்கள் ரூ.50 ஆயிரத்துக்குமேல் ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்து செல்லக் கூடாது போன்ற பல்வேறு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இதனை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பறக்கும் படை குழுவில் ஒரு பறக்கும் படை அதிகாரி, ஒரு உதவி அதிகாரி, ஒரு உதவி காவல் ஆய்வாளா், 2 காவலா்கள், ஒரு விடியோ பதிவாளா் என 6 போ் அடங்கியுள்ளனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்துக்கு ஆபத்து -முதல்வர் ஸ்டாலின்

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக ஜெ.பி.நட்டா பிரசாரம்!

பலாப்பழ சின்னம் மீதுதான் சந்தேகம்: ஓ. பன்னீர்செல்வம் மீது ஓபிஎஸ் புகார்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் அறுபத்து மூவர் விழா கோலாகலம்!

‘வில்லேஜ் குக்கிங்’ தாத்தாவின் மருத்துவத்துக்கு உதவ ராகுல் மறுப்பா?

SCROLL FOR NEXT