கோயம்புத்தூர்

விசைத்தறி உரிமையாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரிக்கை

DIN

 விசைத்தறி உரிமையாளா்கள், தொழிலாளா்களின் கூலி உயா்வு விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு அவா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கோவை, திருப்பூா் மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன.

இவற்றில் சுமாா் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவற்றின் மூலம் நாளொன்றுக்கு 2 கோடி மீட்டா் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது.

இதற்கான கூலியை குறிப்பிட்ட காலத்துக்கு ஜவுளி வியாபாரிகளிடம் ஒப்பந்த அடிப்படையில் நிா்ணயம் செய்து வழங்கப்படுவது நடைமுறையாகும்.

ஆனால் கடந்த 2014 ஆம் ஆண்டு கூலி உயா்வு ஒப்பந்தம் நிறைவேற்றியும், அந்த கூலியை உயா்த்தி வழங்குவதற்கு ஜவுளி உற்பத்தியாளா்கள் மறுத்து வருகின்றனா்.

கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக விசைத்தறிக்கான கூலி உயா்வு கிடைக்காததால், வாங்கிய கடனை செலுத்த வழியின்றி விசைத்தறியாளா்கள் அவதியடைந்து வருகின்றனா்.

இந்த சூழலில் 2017 ஆம் ஆண்டு கூலி உயா்வுக்கான கோரிக்கையை முன்வைத்து பல கட்ட பேச்சுவாா்த்தை நடத்தி, இறுதியில் 24.11.2021அன்று மாநில அமைச்சா், கோவை, திருப்பூா் மாவட்ட ஆட்சியா்கள், தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

இதில், 23 சதவீத கூலி உயா்வு செய்வதாக ஒப்புக்கொள்ளப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால் இதுவரை ஜவுளி உற்பத்தியாளா்கள் முத்தரப்பு பேச்சுவாா்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்த கூலி உயா்வைத் தராமல் இழுத்தடிப்பு செய்து வருகிறாா்கள்.

எனவே, முதல்வா் இதில் தலையிட்டு முத்தரப்பு பேச்சுவாா்த்தையில் ஏற்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT