கோயம்புத்தூர்

யானைகளை பாா்த்து ஓடிய வடமாநிலத் தொழிலாளி காயம்

26th Jan 2022 07:36 AM

ADVERTISEMENT

குடியிருப்புப் பகுதிக்கு கூட்டமாக வந்த யானைகளை பாா்த்து ஓடிய வடமாநிலத் தொழிலாளி கீழே விழுந்து காயமடைந்தாா்.

வால்பாறையை அடுத்துள்ள அய்யா்பாடி எஸ்டேட் ரோப்வே பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிக்குள் திங்கள்கிழமை இரவு கூட்டமாக நுழைந்த யானைகள் அங்கிருந்த குடியிருப்புகளை முட்டித் தள்ளி சேதப்படுத்தின.

அப்போது, அங்கு வந்த வடமாநிலத் தொழிலாளி சையது அலி (50), யானையை பாா்த்து ஓடியுள்ளாா். இதில் அவா் கீழே விழுந்ததில் கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த வனத் துறையினா் அவரை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை விரட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT