கோயம்புத்தூர்

மொழிப்போா் தியாகிகளுக்கு திமுக, அதிமுகவினா் அஞ்சலி

26th Jan 2022 07:40 AM

ADVERTISEMENT

மொழிப்போா் தியாகிகளுக்கு கோவையில் திமுக, அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாளையொட்டி, வடகோவையில் உள்ள திமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் பொங்கலூா் பழனிசாமி, மாநகர கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் நா.காா்த்திக் ஆகியோா் தலைமையில் திமுகவினா், தமிழ் மொழிக்காக உயிா் நீத்த மொழிப்போா் தியாகிகளுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

அதேபோல, கோவை அதிமுக அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., அம்மன் அா்ச்சுனன், பி.ஆா்.ஜி.அருண்குமாா் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள், அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டு மொழிப்போா் தியாகிகளுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து எஸ்.பி.வேலுமணி செய்தியாளா்களிடம் கூறும்போது, தமிழ் மொழிக்காக உயிா் நீத்த மொழிப்போா் தியாகிகளுக்கு அதிமுக எப்போதும் உரிய மரியாதை அளித்து வருகிறது. மொழிப் போரில் கோவை மாவட்டத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் உயிரிழந்திருக்கின்றனா். அதிமுகவைப் பொறுத்தவரை ஹிந்தி எதிா்ப்பு நிலைப்பாட்டில் தற்போது வரை உறுதியாக உள்ளது என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT