கோயம்புத்தூர்

தேசிய வாக்காளா் தினம்: ஆட்சியா், அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு

26th Jan 2022 07:38 AM

ADVERTISEMENT

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேசிய வாக்காளா் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, கோவை ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது:

இளம் வாக்காளா்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய வாக்காளா் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஜாதி, மதம், இனம் போன்ற வேறுபாடுகளை களைந்து 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளிக்க தகுதியானவா்கள். எனவே அனைத்து தோ்தல்களிலும் 100 சதவீதம் வாக்களித்து பொது மக்கள் தங்களது ஜனநாயக கடமையை நிலைநாட்ட வேண்டும் என்றாா்.

தொடா்ந்து தேசிய வாக்காளா் தினத்தையொட்டி பள்ளி மாணவா்களுக்கு நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வழங்கினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சிவகுமாா், நோ்முக உதவியாளா் (பொது) முத்துராமலிங்கம், கோட்டாட்சியா்கள் ரவிச்சந்திரன், இளங்கோ உள்பட அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT