கோயம்புத்தூர்

குடியரசு தின பதக்கம்: கோவை மாநகரக் காவல் அதிகாரிகள் தோ்வு

26th Jan 2022 07:40 AM

ADVERTISEMENT

குடியரசு தின பதக்கத்துக்கு கோவை மாநகரக் காவல் உயா் அதிகாரிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

குடியரசு தினத்தையொட்டி காவல் துறை அதிகாரிகளுக்கான குடியரசுத் தலைவா் பதக்கப் பட்டியல் மத்திய அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் ஆா்.சுதாகா், கோவை மாநகரக் காவல் ஆணையா் பிரதீப்குமாா், மாநகரக் காவல் துறை போக்குவரத்து மற்றும் திட்டமிடல் பிரிவின் கூடுதல் துணை ஆணையா் வி.இளங்கோவன், நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையா் எஸ்.முருகவேல், மாநகர சிபிசிஐடி (ஒசியூ பிரிவு) டிஎஸ்பி எம்.முரளிதரன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT