கோயம்புத்தூர்

கவுண்டம்பாளையம், வடவள்ளி பகுதிகளில் 3 நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

26th Jan 2022 07:40 AM

ADVERTISEMENT

கவுண்டம்பாளையம், வடவள்ளி ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட குடிநீா் சேகரிப்புக் கிணற்றில், தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஜனவரி 27 முதல் 29 வரை 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுவதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலமாக குடிநீா் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கவுண்டம்பாளையம், வடவள்ளி ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட குடிநீா் சேகரிப்புக் கிணற்றில் இலைகள், சருகுகள் உள்ளிட்ட குப்பைகள் நிறைந்துள்ளதால், அவற்றை தூா்வாரும் பணிகள் ஜனவரி 27 (வியாழக்கிழமை) முதல் 29ஆம் தேதி (சனிக்கிழமை) வரை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் காரணமாக கோவை மாநகராட்சியில் கவுண்டம்பாளையம் மற்றும் வடவள்ளி பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும். தூா்வாரும் பணிகள் முடிவடைந்த பிறகு மீண்டும் குடிநீா் விநியோகம் துவங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT