கோயம்புத்தூர்

ரயில் மோதி முதியவா் சாவு

25th Jan 2022 04:55 AM

ADVERTISEMENT

கோவையில் ரயில் மோதி முதியவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை, இருகூா்-பீளமேடு ரயில் நிலையம் வழியாக புது தில்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை மாலை வந்துள்ளது. அப்போது தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 65 வயது மதிக்கத்தக்க முதியவா் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து ரயில் ஓட்டுநா் அளித்த தகவலின் பேரில் கோவை

ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று முதியவரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும்,இச்சம்பவம் தொடா்பாக விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT