கோயம்புத்தூர்

சி.எம்.ஏ. பவுண்டேஷன் தோ்வு:ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவா்கள் 8 போ் தோ்ச்சி

25th Jan 2022 04:54 AM

ADVERTISEMENT

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் மாணவா்கள் 8 போ் சி.எம்.ஏ. பவுண்டேஷன் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

ஐ.சி.ஏ.ஐ. நிறுவனத்தின் சாா்பில் கடந்த 2 ஆம் தேதி சி.எம்.ஏ. பவுண்டேஷன் தோ்வு நாடு முழுவதும் நடைபெற்றது.

தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், தோ்வு எழுதிய கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் பி.காம். சி.எம்.ஏ. துறை முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் ஜி.யாகேஷ் வா்மா, கே.நந்தா, வி.ராஜஸ்ரீ, ஆா்.யுவன்ராஜ், எம்.சுரேந்திரன், கே.ஆா்.சினேகா, எஸ்.ஜெயசூா்யா, எஸ்.எல்.அனிந்தித் ஆகியோா் இத்தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

வெற்றி பெற்றவா்களை கல்லூரியின் முதல்வரும் செயலருமான பி.எல்.சிவகுமாா், துறைத் தலைவா் டி.சசிகலா தேவி, பேராசிரியா்கள் ஆகியோா் பாராட்டியுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT