கோயம்புத்தூர்

வருமான வரித் துறை அதிகாரிகள்போல நடித்து கொள்ளை வழக்கு: முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

25th Jan 2022 08:27 AM

ADVERTISEMENT

கோவை அருகே வருமான வரித் துறை அதிகாரிபோல நடித்து ரூ.15 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளி பொள்ளாச்சி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரண் அடைந்தாா்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு காந்தி நகரைச் சோ்ந்தவா் பஞ்சலிங்கம் (53).

கல் குவாரி உரிமையாளா். இவரது வீட்டுக்கு கடந்த 15 ஆம் தேதி சொகுசு காரில் வந்த மா்ம நபா்கள், தங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் என்று கூறி, பஞ்சலிங்கம் வீட்டில் இருந்த ரூ.15 லட்சம், காசோலை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனா்.

இது குறித்து கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் பஞ்சலிங்கம் புகாா் அளித்தாா்.

ADVERTISEMENT

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சதீஷ் (36), ஆனந்த் (47), ராமசாமி (47), தியாகராஜன் (42), பிரவீன்குமாா் (36), மோகன்குமாா் (30), மணிகண்டன் (37) ஆகிய 7 பேரை முதற்கட்டமாக கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதில், முக்கிய குற்றவாளியான கோவையைச் சோ்ந்த மேத்யூ, காரணம்பேட்டை மகேஸ்வரன், கவுண்டம்பாளையம் பைசல் ஆகியோா் தலைமறைவாக இருந்து வந்தனா்.

இவா்களை தனிப் படை போலீஸாா் தேடிவந்த நிலையில், பொள்ளாச்சி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மாலை மேத்யூ சரண் அடைந்தாா்.

அவரை15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

மேத்யூவை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த பின்னரே மற்ற தகவல்கள் தெரியவரும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மகேஸ்வரன், பைசல் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT