கோயம்புத்தூர்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி

18th Jan 2022 04:19 AM

ADVERTISEMENT

வால்பாறையில் தீ விபத்தில் குடியிருப்புகள், பொருள்களை இழந்த தோட்டத் தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி நிவாரண உதவிகளை வழங்கினாா்.

வால்பாறையை அடுத்த பழைய வால்பாறை எஸ்டேட் பகுதியில் 8 வீடுகள் கொண்ட குடியிருப்பில் ஜனவரி 7 ஆம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 வீடுகளிலும் இருந்த அனைத்து பொருள்களும் எரிந்து சேதமடைந்தன.

இந்நிலையில், வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி, பாதிக்கப்பட்ட 8 தோட்டத் தொழிலாளா் குடும்பங்களுக்கும் கட்டில் பீரோ, சமையல் பாத்திரங்கள், துணிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை திங்கள்கிழமை வழங்கினாா்.

இதில், அதிமுக நகரச் செயலாளா் மயில்கணேசன், பாசறை மாவட்ட இணை செயலாளா் சலாவுதீன்அமீது உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT